பெருமாள் கோவிலில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள். 
உள்ளூர் செய்திகள்

காங்கயம் பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு

பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை விழா மிகவும் சிறப்பாக நடந்தது.காங்கயம் நண்பர்கள் அன்னதான கமிட்டி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பெருமாள் மலைமீது குடி கொண்டுள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி, சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை விழா மிகவும் சிறப்பாக நடந்தது.

இதையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளுக்கு துளசி மாலைகளையும், வண்ண மலர்களையும் அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது. முடிவில் காங்கயம் நண்பர்கள் அன்னதான கமிட்டி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT