சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

பல்லடம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேக பூஜை, சிறப்பு யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.

மாலை மலர்

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேக பூஜை, சிறப்பு யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது. காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.