சித்தம்பலம் நவகிரக கோட்டையில் குரு பகவான் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை நடைபெற்றதை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

பல்லடம் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

பிரதோச நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.குரு பகவான் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பல்லடம் :

பல்லடம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவாலயங்களில் பிரதோசதினத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

சிவபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோச நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் குரு பகவான் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது. காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர்கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

SCROLL FOR NEXT