ஆற்றல் அறக்கட்டளை சார்பில் உணவகம் திறந்து வைக்கப்பட்டக் காட்சி.  
உள்ளூர் செய்திகள்

தாராபுரத்தில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் உணவகம் திறப்பு

ஆற்றல் உணவகம் மற்றும் ஆற்றல் மருத்துவமனை தொடங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த மாதம் காங்கேயம் பகுதியில் ஆற்றல் உணவகம் திறக்கப்படும் என்றார்.

தாராபுரம்:

தாராபுரம் பகுதியில் பொதுமக்களுக்காக ஆற்றல் உணவகம் திறக்கப்பட்டது. இது குறித்து ஆற்றல் அறக்கட்டளை நிறுவன தலைவர் ஆற்றல் அசோக்குமார் கூறுகையில், அறக்கட்டளை சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் தாராபுரம் பகுதியில் பொதுமக்களுக்காக ஆற்றல் உணவகம் மற்றும் ஆற்றல் மருத்துவமனை தொடங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அடுத்த மாதம் காங்கேயம் பகுதியில் ஆற்றல் உணவகம் திறக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை மாநில செய்தி தொடர்பாளர் கார்வேந்தன் ,மாநில விவசாய அணி பிரிவு துணைச் செயலாளர் பார்த்தசாரதி, இந்து முன்னணி திருப்பூர் மாவட்ட புறநகர் கோட்ட பொறியாளர் கோவிந்தராஜ், கூட்டுறவு சங்க பிரிவு செயலாளர் சுகுமார், பொன்னிவாடி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், ருத்ராவதி பேரூராட்சி செயலாளர் மோகன்ராஜ் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.