திருப்பூர் :
விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிவ ஷர்மிளா அறக்கட்டளை ஒருங்கிணைந்த வளாகத்தில் முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆர். சுகுமார் தலைமையில் நடந்த இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், சதீஸ், லோகு, சிவா, அஸ்வின், மணி, பசபுகழ் மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் காளிமுத்து, போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.