காங்கயம் :
மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா் பப்லு பிரமானிக் (வயது 21). இவா் காங்கயம் அருகே, சத்திரவலசு பகுதியில் உள்ள தனியாா் எண்ணெய் ஆலையில் கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக பருப்பு உலர வைக்கும் கலனில் சிக்கி அவா் காயமடைந்தாா்.இதைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.