கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சைக்கிள் பயணத்துக்கு திருப்பூரில் வரவேற்பு

திருப்பூர் வந்தடைந்த கோவை சைக்கிள் பயணக்குழுவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள், தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே வரவேற்றனர்.

திருப்பூர்:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம் தொடங்கியுள்ளனர். சென்னை, கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி ஆகிய 4 பகுதிகளில் துவங்கியுள்ள சைக்கிள் பயணம், திருச்சியில் மே 1-ந் தேதி சங்கமிக்கிறது.

மொத்தம் 3,000 கி.மீ., பயணிக்கும் சைக்கிள் குழுவுடன், தென்காசி, தேனி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளுர் மாவட்டங்களில் இருந்து உபகுழுக்களும் சைக்கிள் பயணத்தில் இணைந்துள்ளன. 

திருப்பூர் வந்தடைந்த கோவை சைக்கிள் பயணக்குழுவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  நிர்வாகிகள், தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே வரவேற்றனர். அனுப்பர்பாளையம் பகுதியில்  நகர தலைவர் நவநீதன் தலைமையில் வரவேற்பு பொதுக்கூட்டம் நடந்தது.

SCROLL FOR NEXT