சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர். 
உள்ளூர் செய்திகள்

குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்

குடிநீர் குழாய்களை ஆய்வு செய்து, பழுதடைந்த பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில்  உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலை  மேம்பாலம் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வெளியேறிய தண்ணீர்  சாலைகளில் ஆறு போல்  ஓடியது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இப்படி  தண்ணீர் வீணாக வெளியேறுவது பொதுமக்களை கவலையடைய செய்துள்ளது.  எனவே உடைப்பு ஏற்பட்ட குழாயை சரிசெய்வதுடன் அதிகாரிகள் மாநகர் பகுதி முழுவதும்  அவ்வப்போது குடிநீர் குழாய்களை  ஆய்வு செய்து, பழுதடைந்த பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.