திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 29-வது வார்டில் அ.தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் களமிறங்கி உள்ளன. பா.ஜ.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள், மாற்று வேட்பாளர் என 10 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மாற்று வேட்பாளர் வாபஸ் பெற்றாலும் 7பேர் போட்டியிடும் நிலை ஏற்படும்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் கவுன்சிலரின் கணவர் சின்னச்சாமி களமிறங்கியுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியிலும் சின்னசாமி என்பவர் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
அ.தி.மு.க.,மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர் ஒரே மாதிரி இருப்பதால் வாக்காளர் குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சின்னத்தை பார்த்து ஓட்டளிக்குமாறு வாக்காளரிடையே 2 கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.