திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதையொட்டி கடந்த 4-ந்தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. வருகிற 12-ந் தேதி எம்பெருமான் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.
வருகிற 13-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார் சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாளுக்கு மகா திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜையும் நடக்க உள்ளது. அதன்பின் நம்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.