உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள குரல்குட்டை கிராமத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தேங்காய் மட்டை மற்றும் நார் மஞ்சு மில் உள்ளது.இந்த நிலையில் நேற்று இந்த மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .உடனே தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அலுவலர் கோபால் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் நார் ஆகியவை எரிந்து நாசமானது .மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.