மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய மாணவர்கள். 
உள்ளூர் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் செய்திருந்தார்

மாலை மலர்

திருப்பூர்:

கடந்த  2019ம் ஆண்டு  பிப்ரவரி14-ந்தேதி புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த  இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாக கல்லூரி வளாகத்தில் முதல்வர் கிருஷ்ணன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் படத்திற்கு மெழுகு வர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர், பிறகு மலர் அஞ்சலியும், மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் செய்திருந்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.