திருப்பூர்:
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வலியுறுத்தி தமிழக முழுவதும் இன்று அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் போக்குவரத்து கழக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.