கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

கண்தானம் குறித்து இந்தியா முழுவதும் திருப்பூர் வாலிபர் சுற்றுப்பயணம்

20 நாட்கள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்:

கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, திருப்பூர் இடுவாயை சேர்ந்த விஜயகுமார் என்பவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பல்லடத்தில் தனது விழிப்புணர்வு பயணத்தை துவக்கினார். ரோட்டரி சங்க  மாவட்ட ஆளுநர் இளங்குமரன் பயணத்தை துவக்கி வைத்தார்.

விஜயகுமார் கூறுகையில், ‘ரோட்டரி சங்க துணையுடன் கண் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பயணத்தை தொடங்கி உள்ளேன். தினசரி மாலை 6 மணி வரை பயணம் தொடரும், பல்லடத்தில் துவங்கி அம்பாலா (டெல்லி) வரை 3,400 கி.மீ., பயணம் செய்கிறேன்.

போகும் வழியெங்கும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி நோட்டீஸ் வினியோகிக்கப்படும். ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு பகுதியிலும் எங்களுக்கு வரவேற்பு அளிக்க தயாராக உள்ளனர். 20 நாட்கள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.