ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் குமரன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் குமரன் நினைவு நாள் நிகழ்ச்சி

திருப்பூர் குமரனின் நினைவு ஸ்தூபி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாலை மலர்

திருப்பூர்:

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 90ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் எதிரில் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

சிவசேனா கட்சி இளைஞரணி மாநில தலைவர் திருமுருகதினேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இதில் மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் பிரகாஷ், மாநகர் மாவட்ட செயலாளர் தங்கவேலு, வடக்கு மாநகர செயலாளர் முருகேஷ், நிர்வாகிகள் லோகநாதன், சஞ்சீவ் மற்றும் சிவசேனா மாவட்ட நகர, ஒன்றிய இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் திருப்பூர் குமரன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் திருப்பூர் குமரனின் நினைவு ஸ்தூபி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே போல் பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.