கோப்புபடம்.  
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் பெண்ணிடம் நகைபறிப்பு

இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் ஜெய்நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை திடீரென்று பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT