திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.,), நிர்வாக்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார்.
செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் ராமு, கருப்பசாமி, துணை செயலாளர் சரவணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி பணி வரன்முறை செய்து, பதவி உயர்வு வழங்க வேண்டும். ரேஷன் கடையில் கைரேகை பதிவாகாத நபர்களுக்கு, செல்போன் எண்ணுக்கு வரும், கடவு எண்ணை பயன்படுத்தி பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கைரேகை பதிவாகாத கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கும் பட்சத்தில் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.
அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சரியான அளவில் தரமான பொருட்கள் வருவதை கூட்டுறவுத்துறை உறுதி செய்ய வேண்டும்.
எடை குறைவாகவும், தரமில்லாத பொருட்களை கடைகளுக்கு அனுப்பிவிட்டு விற்பனையாளர் மீது பழிசுமத்தும் போக்கை மாற்றி கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.