கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் இரவு போக்குவரத்து தடையை உடனடியாக நீக்க வேண்டும்- உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக செல்லும் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

பல்லடம்:

திம்பம் மலைப்பாதையில் இரவு போக்குவரத்துக்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பல்லடத்தில்  நிருபர்களிடம்   கூறியதாவது:-

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக செல்லும் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடையால் விவசாயிகள், பொதுமக்கள்  துயரத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

விவசாயிகளின் விளைபொருட்களை வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. நோயாளிகள் தகுந்த நேரத்தில் சிகிச்சை பெற முடியவில்லை. தமிழக எல்லை பகுதியில் இரவு 9 மணி முதல் காலை வரை சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் காத்திருக்கின்றன.

இதேபோல கர்நாடக எல்லையிலும் சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் காத்திருக்கின்றன. காலை 6 மணிக்கு அனுமதி அளித்தபின் இவைகள் செல்லத் துவங்குகின்றன. அப்போது ஏற்படும் டயர் பஞ்சர் ஆவது, மற்றும் விபத்துக்களால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு  நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும், விவசாயிகள் விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாமலும்  இன்னும் பலர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். 

னவே தமிழக அரசு உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள நிலை அறிந்து இரவு நேர போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் தடையை நீக்காவிட்டால்  தடையை நீக்கக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில் உழவர் உழைப்பாளர் கட்சி கலந்து கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.