ரகளையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர். 
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிகள் மீது கற்களை வீசி தாக்கிய வடமாநில வாலிபர்

நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மீது பள்ளியின் முன்பு நின்றிருந்த வடமாநில வாலிபர் ஒருவர் கற்களை வீசி தாக்கியுள்ளார்.

மாலை மலர்

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கே.அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது முத்தாண்டிபாளையம்.இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊருக்கு மத்தியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. 

இங்கு சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மீது பள்ளியின் முன்பு நின்றிருந்த வடமாநில வாலிபர் ஒருவர் கற்களை வீசி தாக்கியுள்ளார். 

இதனால் பயந்து போன மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அங்கு வந்த பெற்றோர்கள் அந்த வாலிபரிடம் விசாரித்துள்ளனர். குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் பெற்றோர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் பல்லடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குடிபோதையில் இருந்த வடமாநில வாலி பரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.