கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

மடத்துக்குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு ,ஆதார் அட்டை மற்றும் இரு போட்டோ ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுமலை:

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள ஸ்மார்ட் கார்டு வழங்க உடுமலை தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் டாக்டர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இதில் பங்கேற்றனர். வரும் 17-ந்தேதி மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.

இதில் பங்கேற்பவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய ஏதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு ,ஆதார் அட்டை மற்றும் இரு போட்டோ ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT