தூர்வாரப்படாமல் உள்ள சாக்கடை கால்வாய். 
உள்ளூர் செய்திகள்

சாக்கடை கால்வாயை தூர்வார கோரிக்கை

சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாலை மலர்

வீரபாண்டி:

திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடையில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் 2 ஆண்டுகளாக உள்ளது.

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பாலத்தின் அடியில் சாக்கடை மண் நிரம்பியுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி பலவகை வைரஸ் நோய்கள் ஏற்படுகின்றன. மக்கள் பிரதிநிதி வந்த பின்பு இதற்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் இதற்கு இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே எங்களின் நீண்டநாள் கோரிக்கையை திருப்பூர் மேயர் மற்றும் நான்காம் மண்டலத்தலைவர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.