கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 163 வாகனங்கள் - 7-ந்தேதி ஏலம்

உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம்.

திருப்பூர்:

திருப்பூர் வீரபாண்டி, நல்லூர் மற்றும் மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் பதிவு செய்யப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. அவ்வகையில், 3 போலீஸ் நிலையங்களை சேர்ந்த, 163 வாகனங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 7-ந் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது.ஏலம் கோர விருப்பமுள்ள நபர்கள் ஆதார் கார்டு, வைப்பு தொகை 10 ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலையாக தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 6-ந் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் மோட்டார் சைக்கிள் ஏலம் எடுக்க விரும்புவர்கள் வீரபாண்டி, நல்லூர், மங்கலம் போலீஸ் நிலையங்களை அணுகி, ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம். கூடுதல் விபரங்களுக்கு தெற்கு தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு அணுகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

SCROLL FOR NEXT