கண்ணம்மாள். 
உள்ளூர் செய்திகள்

ருத்ராவதி பேரூராட்சி தலைவர் தேர்வு

இன்று தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் அ.தி.மு.க., பா.ஜ., சுயேட்சை கூட்டணியில் தலைவர், துணைத் தலைவர் முடிவு செய்யப்பட்டனர்.

குண்டடம்:

இன்று தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் அ.தி.மு.க., பா.ஜ., சுயேட்சை கூட்டணியில் தலைவர், துணைத் தலைவர் முடிவு செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் ருத்ராவதி பேரூராட்சியில் அ.தி.மு.க,. பா.ஜ.க., சுயேட்சைகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 8வது வார்டில் அதிமுக. பா.ஜ., ஆதரவு சுயேட்சை வேட்பாளரும், 14வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஏனைய 13வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 12வார்டுகளை அ.தி.மு.க., பா.ஜ, சுயேட்சை கூட்டணி வேட்பாளர்கள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்களின் பலம் 6ஆகவும், பா.ஜ.க., கவுன்சிலர்களின் பலம் 3ஆகவும் அ.தி.மு.க., பா.ஜ., ஆதரவு சுயேட்சை கவுன்சிலர்களின் பலம் 5ஆகவும் உள்ளது. ஆக இந்த  கூட்டணி 14வார்டுகளை தன்வசப்படுத்தியுள்ளனர். 1வது வார்டில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

இன்று தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் அ.தி.மு.க., பா.ஜ., சுயேட்சை கூட்டணியில் தலைவர், துணைத் தலைவர் முடிவு செய்யப்பட்டனர். அதன்படி 1வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கண்ணம்மாள் ருத்ராவதி பேரூராட்சி தலைவராகவும், 2வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், முன்னாள் ருத்ராவதி பேரூராட்சி தலைவருமான மோகன்ராஜ் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.