கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

கிணற்றுக்குள் விழுந்த 2 மயில்கள் மீட்பு

தீயணைப்பு வீரர்கள் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்த கிணற்றுக்குள் இறங்கி இரண்டு மயில்களை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் அடுத்த பொங்குபாளையம் காளம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவரது தோட்டத்தில் உள்ள 40 அடி உயர கிணற்றில் 2 மயில்கள் உள்ளே விழுந்தது. பறக்க முடியாமல் உள்ளே சிக்கி கொண்டது. 

இதைபார்த்த மூர்த்தி திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அப்பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்த கிணற்றுக்குள் இறங்கி இரண்டு மயில்களை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.