திருப்பூர்:
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி 1, 5 நகராட்சிகள், 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கிடையே திருப்பூர் மாநகரில் தேர்தல் நடத்தை விதிகளின்படி கடந்த 2 நாட்களாக பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றும் பணி நடந்து வந்தது.
இதன்படி ஒட்டுமொத்தமாக 2,200 விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், இதில் சுவர் ஓவியங்களும் மறைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.