கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் கற்றல் திறனை மீட்க வினாடி-வினா போட்டி

அனைத்து பள்ளியிலும் திட்டமிட்டப்படி போட்டியை நடத்த வேண்டும். அந்தந்த வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்தே கேள்வி கேட்கப்படுகின்றன.

மாலை மலர்

திருப்பூர்:

ஊரடங்குக்கு பிறகு மாணவர்களின் கற்றல் மற்றும் அறிதிறன் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனை மீட்டெடுக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை வினாடி-வினா போட்டியினை 9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு கொண்டு வந்துள்ளது.

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் வளாகத்தில் உள்ள ஹைடெக் ஆய்வகத்தில் ஆன்லைன் முறையில் இதை தினசரி நடத்திக் கொள்ளலாம். திருப்புதல் தேர்வு இருப்பின் பிற வகுப்பு மாணவர்களை போட்டியில் பங்கேற்க செய்ய வேண்டும். ஆனால் திருப்பூரின் பெரும்பாலான பள்ளிகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அனைத்து பள்ளியிலும் திட்டமிட்டப்படி போட்டியை நடத்த வேண்டும். அந்தந்த வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்தே கேள்வி கேட்கப்படுகின்றன. இருப்பினும் 40 சதவீத மாணவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

அனைத்து மாணவர்களையும் பங்கேற்க செய்வது சார்ந்து தினமும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நினைவூட்டல் அனுப்பியும், வருகை சதவீதம் மிக குறைவாக உள்ளது. மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் பின்தங்கியுள்ளது. 

மாவட்ட கலெக்டர் இதற்கான ஆய்வில் ஈடுபட்டு வருவதால் அனைத்து 10-ம் வகுப்பு மாணவர்களையும் இதில் பங்கேற்க ஆவண செய்ய வேண்டும். தலைமையாசிரியர்கள் இதனை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.