பல்லடம்:-
பல்லடம் அருகேயுள்ளஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பல்லடம் தாசில்தாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில், அரசு வழங்கிய இலவச வீட்டு மனை நிலத்தில் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் பொதுவான காங்கிரீட் ரோட்டை உடைத்து, ரோட்டை ஆக்கிரமித்து அஸ்திவாரம் அமைத்துள்ளார்.
இதனை தட்டி கேட்டபோது அப்படித்தான் செய்வோம் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்து, பொது ரோட்டை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரணை செய்த அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும் என தெரிவித்தனர்.