கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற கோரி நாளை போராட்டம்

வேலம்பட்டியில் நீர்வழித்தடத்தை 3 ஏக்கர் வரை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் வேலம்பட்டி சுங்கச்சாவடியை நாளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட உள்ளது. 

இது குறித்து அந்த இயக்கத்தினர் கூறியதாவது:

வேலம்பட்டியில் நீர்வழித்தடத்தை 3 ஏக்கர் வரை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரை 32 கி.மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை (எண்: 381) என குறிப்பிட்டுள்ளனர். 20 கி.மீ., சாலை, நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

நகருக்குள் சாலை அமைத்துவிட்டு சுங்கம் வசூலிக்க சுங்கச்சாவடி அமைக்க முயற்சித்து வருகின்றனர். கலெக்டர் உத்தரவிட்டும் நீர்நிலை ஆக்கிரமிப்பாக உள்ள சுங்கச்சாவடியை அகற்றாமல் அதிகாரிகள் மவுனமாக உள்ளனர்.

இதனை கண்டித்து, சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி நாளை 6-ந்தேதி வேலம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.