அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் நுழைவு வாயில் பூட்டி இருப்பதை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

தரிசனத்திற்கு தடை- பக்தர்கள் ஏமாற்றம்

அவினாசிலிங்கேசுவரர் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.எனவே சாமி தரிசனம் செய்யவந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மாலை மலர்

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மைவாய்ந்த  கருணாம்பிகை உடனுறை அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இங்கு திருப்பூர், கோவை மாவட்டம் மற்றும் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள்.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் 1-ந்தேதி முதல் தை 1-ந் தேதி வரை தினமும் அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும் . அதேபோல் இந்த ஆண்டும் மார்கழி மாதம் 1-ந் தேதி முதல் அதிகாலை நேரத்தில் சிறப்புவழிபாடுகள் நடைபெற்று வந்தது. 

அப்போது அவினாசி ஒன்றியத்திலுள்ள 31 ஊராட்சி பகுதிகளிலிருந்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனத்தில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் கொரோனா,ஒமைக்ரான் ஆகிய கொடிய தொற்று பரவலை தடுக்க வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலில் சாமி கும்பிட பத்தர்களுக்கு அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும் வழக்கம்போல் சுவாமிக்கு மார்கழிமாத வழிபாடு நடைபெற்று வருகிறது. ஆனால் அவினாசிலிங்கேசுவரர் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே சாமி தரிசனம் செய்யவந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.