கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

பரிசோதனை தாமதத்தால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிக்கல்

தொற்று பாதிப்பை தெரிவிப்பதில் தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகத்தினர் தாமதிக்கின்றனர்.

அவிநாசி:

கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதித்தோரை மருத்துவமனையில் சேர்ப்பது, வீடுகளில் தனிமைப்படுத்துவது போன்ற பணிகளில் சுகாதார மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்: 

இரண்டாம் அலையின்போது அரசு மற்றும் தனியார் ஆய்வகம், மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு உறுதி செய்வோர் குறித்த விவரம்  விரைவாக உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போது தொற்று பாதிப்பை தெரிவிப்பதில் தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகத்தினர் தாமதிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டோர் வசிப்பிடங்களில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது என்றனர்.

SCROLL FOR NEXT