திருப்பூா்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 -ம் வகுப்பு, 9 முதல் 12 -ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையிலும், தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஒவ்வொரு பள்ளியில் உள்ள ஹைடெக் லேப்பில் இருந்து இணையதளம் மூலமாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், திருப்பூா் மாவட்டத்தில் 6 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 35 போ், 9 முதல் 12 -ம் வகுப்பு வரையில் உள்ள தலா 40 மாணவ, மாணவிகள் என மொத்தம் 190 போ் வெற்றி பெற்றிருந்தனா்.
இந்த மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா திருப்பூா் கே.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கி பாராட்டினாா். இந்நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.