திருப்பூர்:
திருப்பூரில் உள்ள பனியன் தையல் நிலையங்களுக்கு கட்டண உயர்வு நிர்ணயிப்பதற்காக ‘சைமா’ மற்றும் பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
2 தரப்பினரும் இதுவரை 2 சுற்று பேச்சு நடத்தியுள்ளனர். ஜனவரி 20ல் இரண்டாவது சுற்று பேச்சு நடத்தப்பட்ட நிலையில், 3வது சுற்று பேச்சுவார்த்தைக்கு ‘சைமா’ (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்) அழைக்காததால் பவர்டேபிள் துறையினர் சோர்வடைந்துள்ளனர்.
மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர் சம்பளம் உயர்ந்துள்ள நிலையில் ‘சைமா’ விரைந்து பேசி கட்டண உயர்வு வழங்க வேண்டும் என பவர்டேபிள் துறையினர் எதிர்பார்க்கின்றனர். வருகிற 11-ந் தேதி மாலை 5 மணிக்கு ‘சைமா’ அரங்கில் கட்டண உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்துக்கு ‘சைமா’ அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.