கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

பவர்டேபிள் கட்டண உயர்வு - சைமா சங்க செயற்குழு இன்று ஆலோசனை

‘சைமா’ சங்க செயற்குழு கூட்டம் அச்சங்க அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

திருப்பூர்:

பின்னலாடை தைத்து கொடுக்கும் தையல் நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு நிர்ணயிப்பதற்கான பேச்சுவார்த்தை திருப்பூரில் நடந்து வருகிறது. ஆடை உற்பத்தியாளர் சங்கமான ‘சைமா’ மற்றும் தையல் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் பவர்டேபிள் உரிமையாளர் சங்கமும் இதில் ஈடுபட்டுள்ளன.

முதல் ஆண்டில் 30 சதவீதம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 15 சதவீதம் என மொத்தம் 75 சதவீத கட்டண உயர்வு கேட்கிறது பவர்டேபிள் சங்கம். இருதரப்பு சங்கத்தினரும், இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், ‘சைமா’ சங்க செயற்குழு கூட்டம் அச்சங்க அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. பவர்டேபிள் கட்டண உயர்வு குறித்து தங்களிடம் கருத்து கேட்க வேண்டும் என உறுப்பினர் சிலர், ‘சைமா’விடம் வலியுறுத்தி உள்ளனர்.

இன்றைய செயற்குழு கூட்டத்தின் முக்கிய கருப்பொருளாக பவர்டேபிள் ஒப்பந்த பேச்சு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. செயற்குழு தீர்மானங்கள்படி பவர்டேபிள் சங்கத்துடன் அடுத்த சுற்று நடத்த ‘சைமா’ முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT