கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவில் நகராட்சி கூட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி

கூட்டத்தில் துணை நகர் மன்ற தலை–வர்விஜயலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் கே.மணி ஆகியோர் கலந்துகொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

மாலை மலர்

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் நகராட்சி மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவி மு.கனியரசி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வெள்ளகோவில் நகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணி, மின் கம்பம், தெருவிளக்கு, ஆழ்குழாய் கிணறு அமைத்தல், குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் போன்ற பணிகளுக்கு குறைவான தொகை கோரப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு பணி நியமன ஒப்பந்தம் வழங்குவது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசு மானியம் மற்றும் தனியார் பங்களிப்புடன் மழைநீர் வடிகால் அமைத்தல், சாலையோரங்களில் மரம் நடுதல், எரிவாயு மயானத்தில் பூங்கா அமைத்தல், பஸ் நிலையம் அருகில் பூங்கா அமைத்தல் போன்ற பணிகளுக்கு அனுமதி வழங்குவது.

நகராட்சி பகுதியில் உள்ள தனியார் தங்களுக்கு சொந்தமான இடத்தை குடியிருப்பு மனைகளாக மாற்ற அனுமதி கோரிய விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி வழங்குவது, வெள்ளகோவில் நகராட்சி பொது சுகாதார பிரிவுக்கு பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்புத்தூள் உள்பட தளவாட சாமான்கள் மற்றும் கிருமிநாசினி பொருட்கள் வாங்க மன்றம் ஒப்புதல் வழங்குவது, கடந்த 2021- 22ம் நிதியாண்டில் சொத்து–வரி ,தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணங்கள் 100 சதம் வசூல் செய்தமைக்கு 3 வருவாய் உதவியாளர்களுக்கு அடிப்படை ஒரு மாத ஊதியம் தொகை ரூ.83 ஆயிரத்து 300-ஐ ஊக்கத்தொகையாக வழங்குவது உள்பட 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணை நகர் மன்ற தலைவர் விஜயலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் கே.மணி ஆகியோர் கலந்துகொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.