கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித்தொகைக்கான திறனாய்வு தேர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதும் மையம் திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது.

திருப்பூர்:

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த தேர்வு எழுத ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தகுதி உடையவர் ஆவர். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அதனடிப்படையில் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் இன்று தேர்வை எழுதினர். திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதும் மையம் திருப்பூர் ஜெய்வாபாய்  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.

SCROLL FOR NEXT