நிகழ்ச்சியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு மண்டல மேலாளர் புவனேஸ்வரி, கடன் முன் அனுமதி வழங்கிய காட்சி. அருகில் வங்கி அதிகாரிகள் உள்ளனர். 
உள்ளூர் செய்திகள்

எஸ்.பி.ஐ., வங்கி சார்பில் வீட்டு கடன் மேளா

கட்டுமான நிறுவனத்தினர் 11 அரங்குகள் அமைத்திருந்தனர்.வங்கியை அணுகி கூடுதல் விவரங்கள் பெறலாம்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி வளாகத்தில சிறப்பு வீட்டுக்கடன் மேளா நடந்தது. அதனை ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் புவனேஷ்வரி தொடங்கி வைத்தார்.கட்டுமான நிறுவனத்தினர் 11 அரங்குகள் அமைத்திருந்தனர்.

பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள், 100க்கும் மேற்பட்டோர் தங்கள் கனவு இல்லத்தை நனவாக்குவதற்காக பொறியாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீட்டுகடன் கேட்டு விண்ணப்பம் அளித்தனர். முகாமில் 25 பேருக்கு வீட்டு கடனுக்கான முன் அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

ஸ்டேட் வங்கியில் 7.55 சதவீத வட்டியில் வீடு, வாகன கடன், 10.10 சதவீத வட்டியில் தனிநபர் கடன்,10.25 சதவீத வட்டியில் ஓய்வூதிய கடன், 7.50 சதவீத வட்டியில் தங்க நகை கடன்கள் வழங்கப்படுகிறது. எனவே அருகாமையில் உள்ள ஸ்டேட் வங்கியை அணுகி கூடுதல் விவரங்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.