கோப்புபடம்.  
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

சிக்கண்ணா அரசு கல்லூரி அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் -வஞ்சிபாளையம் இடையே சிக்கண்ணா அரசு கல்லூரி அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.