கோப்புபடம்.  
உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவில் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் பலி

இவர் நேற்று தனது விவசாய பூமிக்கு பாசனத்திற்காக கீழ்பவானி பாசன வாய்க்கால் மதகை பாசனத்திற்காக திறந்து விட்ட போது, தவறி வாய்க்காலில் விழுந்து விட்டதாக தெரிகிறது.வெள்ளகோவில் அடுத்த முத்தூர் பக்கம் உள்ள வாலிபனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60), விவசாயி.

மாலை மலர்

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அடுத்த முத்தூர் பக்கம் உள்ள வாலிபனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60), விவசாயி. இவர் நேற்று தனது விவசாய பூமிக்கு பாசனத்திற்காக கீழ்பவானி பாசன வாய்க்கால் மதகை பாசனத்திற்காக திறந்து விட்ட போது, தவறி வாய்க்காலில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இதனால் தலையில் பலத்த அடிபட்டு வாய்க்காலில் இருந்து மேலே எழுந்து வர முடியாமல் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.