கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் படித்தல் திறன் கையேடு வெளியீடு

கையேடு அனைத்து வட்டார வள மையங்களுக்கும் அனுப்பி அவற்றின் கீழ் செயல்படும் தன்னார்வலர்கள் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் படித்தல் திறன் கையேடு வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் கையேட்டை வெளியிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.ரமேஷ் பெற்றுக்கொண்டார்.

இந்த கையேடானது திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் (பொறுப்பு) முதல்வர் ம.நடேசன் தலைமையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்காக குறியீடுகள் வழிக்கற்றல் முறையில் தமிழ் படித்தல் திறன் மேம்படுத்துதல் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கையேடு அனைத்து வட்டார வள மையங்களுக்கும் அனுப்பி அவற்றின் கீழ் செயல்படும் தன்னார்வலர்கள் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர்கள் பாபி இந்திரா, சுப்பிரமணி, சரவணகுமார் மற்றும் புள்ளியியல் அலுவலர் லிங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.