கைதான பிரபு. 
உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது

பல்லடம் நால்ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

மாலை மலர்

பல்லடம், மே.2-

பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமி நாயுடுபுரம் பகுதியில் ரமேஷ், பால்ராஜ், ஆகியோரது பூட்டியிருந்த வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை, 4 பவுன், வெள்ளி கொலுசு, வெள்ளி நாணயங்கள், மற்றும் ரொக்கம், ரூ. 60 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. 

இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

 இந்த நிலையில் பல்லடம் நால்ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வாகனப் பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் திருப்பூரை சேர்ந்த பிரபு (வயது 36) என்பதும், கடந்த 19.3.22 அன்று பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரத்தில் பூட்டியிருந்த வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து அவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து 2 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.