அமைச்சர் சாமிநாதனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டு பிரசாதங்கள் வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே கூப்பிடு பிள்ளையார் கோவிலில் அமைச்சர் சாமிநாதன் சுவாமி தரிசனம்

கடந்த மார்ச் 26ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

பல்லடம்:

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் திருக்கோவில் அமைந்து ள்ளது. இந்த நிலையில் சிறிய அளவில் இருந்த கோவில் காரணம்பேட்டை ஆன்மீகப் பெரியோர்களால் சீரமைக்கப்பட்டு, சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் 26ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு, கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் காரணம்பேட்டை சின்னச்சாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.