கோப்புபடம்.  
உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே அனுமதியின்றி பாரில் மது விற்பனை செய்த வாலிபர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.மது விற்பனையில் ஈடுபட்ட கரூர், புஞ்சைபுகலூர், காந்திநகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் வீரமணி (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்

மாலை மலர்

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்பட்டு வரும் பாரில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு ஆய்வு மேற்கொண்டதில் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி மது பாட்டில்கள் 10-ம், மது விற்பனை செய்த ரொக்கம் ரூ. 750-ம் பறிமுதல் செய்யப்பட்டது. மது விற்பனையில் ஈடுபட்ட கரூர், புஞ்சைபுகலூர், காந்திநகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் வீரமணி (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.