திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் விவரம் வருமாறு:
அவிநாசி பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி (தி.மு.க,) துணைத்தலைவர்- மோகன் (சுயேச்சை) . கன்னிவாடி பேரூராட்சித் தலைவர் ரேவதி (தி.மு.க.,) , துணைத் தலைவர்-சீதாமணி (தி.மு.க .).
கொளத்துப்பாளையம் பேரூராட்சித் தலைவர் சுதா (தி.மு.க,), துணைத்தலைவர் கே.கே.துரைசாமி (தி.மு.க., ), சின்னக்காம்பாளையம் பேரூராட்சித் தலைவர் கன்னீஸ்வரி (தி.மு.க. ,), துணைத்தலைவர் சுரேஷ்குமார் (அ.தி.மு.க,).
மூலனூர் பேரூராட்சித் தலைவர் தண்டபாணி (தி.மு.க,) துணைத் தலைவர் பழனிசாமி (தி.மு.க.,), ருத்ராவதி பேரூராட்சித் தலைவர் கண்ணம்மாள் (பா.ஜ.க,), துணைத் தலைவர் மோகன்ராஜ் (அ.தி.மு.க.,), கணியூர் பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்செல்வி (தி.மு.க.), துணைத் தலைவர் ஜெய்நூல்ஆபுதீன் (காங்கிரஸ்).
கொமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சர்மிளாபானு (தி.மு.க.,), துணைத் தலைவர் அழகிரிசாமி (தி.மு.க., ), மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் கலைவாணி (தி.மு.க.,) துணைத் தலைவர் ரங்கநாதன் (தி.மு.க.,).
தளி பேரூராட்சித் தலைவர் உதயகுமார் (தி.மு.க., ) துணைத்தலைவர் செல்வம் (மார்க்சிஸ்ட்), குன்னத்தூர் பேரூராட்சித் தலைவர் குமரசாமி (சுயேச்சை), துணைத் தலைவர் ஜோதிமணி (காங்கிரஸ்), ஊத்துக்குளி பேரூராட்சித் தலைவர் பழனியம்மாள் (தி.மு.க.,) துணைத் தலைவர் சரவணன் (இந்திய கம்யூனிஸ்டு).
முத்தூர் பேரூராட்சித் தலைவர் சுந்தராம்பாள் (தி.மு.க.,) துணைத் தலைவர் அப்பு (தி.மு.க.,). சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பழனிசாமி (சுயேச்சை), துணைத் தலைவர் வரதராஜன் (அ.தி.மு.க.,) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கராமநல்லூர் பேரூராட்சியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.