பல்லடம்:
பல்லடத்தில் அனைத்து வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 30ந்தேதி பல்லடம் கடை வீதியில் வணிகர் சங்க அலுவலக திறப்பு விழாவிற்க்கு வரும் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, பல்லடம் கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பல்லடம் அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.