கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

மாதந்தோறும் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

கொரோனா நீங்கியதால் ஒவ்வொரு மாதமும், 2வது சனிக்கிழமை, தாலுகா அளவிலான குறைகேட்பு முகாம் நடத்தப்படும்.

மாலை மலர்

திருப்பூர்:

பொது வினியோக திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய தாலுகா தோறும்மாதாந்திர குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டது. 

ஊரடங்கு காரணமாக குறைகேட்பு முகாம் நடத்தப்படாமல் இருந்தது. ரேஷன் கார்டு முகவரி மாற்றம், திருத்தம், புதிய கார்டு விண்ணப்பம் போன்ற பணிகளுக்கு பொதுமக்கள், 'இ-சேவை' மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்,

 'கொரோனா நீங்கியதால் ஒவ்வொரு மாதமும், 2வது சனிக்கிழமை, தாலுகா அளவிலான குறைகேட்பு முகாம் நடத்தப்படும். 

குடிமைப்பொருள் தனி தாசில்தார் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைகேட்பு முகாம் நடத்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.