மேயர். தினேஷ்குமார் 
உள்ளூர் செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப்பணிகளை மேயர் ஆய்வு

கடந்த ஆண்டு ஜூனில் துவங்கப்பட்ட இப்பணி, 15 மாதத்திற்குள் நிறைவு பெற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையத்தில் நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன் ரூ. 28.75 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 

சுகாதார நிலையம் 55 ஆயிரத்து 606 சதுர அடியில் 3 தளங்கள் கொண்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூனில் துவங்கப்பட்ட இப்பணி, 15 மாதத்திற்குள் நிறைவு பெற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.கட்டிட பணியை மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். 

அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் பணியை முடிக்க கேட்டு கொண்டார். 

ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், செவிலியர் மற்றும் ஊழியர்களின் தினசரி வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். போதிய ஊழியர்கள் உள்ளனரா, எவ்வளவு பேர் பற்றாக்குறை உள்ளது என கேட்டறிந்தார். 

சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிகளிடம் மருத்துவமனையின் சிகிச்சை குறித்தும், ஏதாவது குறைபாடு உள்ளதா என கேட்டறிந்தார்.