தேசிய மாணவர் படையை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

நிப்ட்- டீ கல்லூரியில் தேசிய மாணவர் படை பிரிவு தொடக்கம்

கல்லூரி சேர்மன் மோகன் வாழ்த்தி பேசினார். கல்லூரி இணைச்செயலாளர் சீனிவாசன் பாராட்டி பேசினார்.

திருப்பூர்:

திருப்பூர் முதலிபாளையத்தில் நிப்ட-டீ பின்னலாடை வடிவமைப்பு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தேசிய மாணவர் படை பிரிவு தொடங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியில் வரவேற்று பேசினார். 

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் தொடங்கிவைத்து பேசினார். கல்லூரி சேர்மன் மோகன் வாழ்த்தி பேசினார். கல்லூரி இணைச்செயலாளர் சீனிவாசன் பாராட்டி பேசினார்.

கோவை என்.சி.சி. படை பிரிவின் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கல்லூரி மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.