கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

மழைநீர் கட்டமைப்புக்காக கடல் மட்டத்தில் இருந்து உயரம் கண்டறியும் பணி தீவிரம்

இந்திய சர்வே துறையின் காங்கயம் பிரிவு அலுவலர்கள் இப்பணியை மேற்கொண்டனர்.

மாலை மலர்

அவிநாசி:

மாநில நெடுஞ்சாலையோரங்களில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இருக்கும். மழையின் போது இதில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் சில நேரங்களில் வெளியேற வழியில்லாமல் பெருக்கெடுக்கும். இதனால் சேதம் ஏற்படும் வாய்ப்புண்டு.  

இத்தகைய மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் கடல் மட்டத்தில் இருந்து எத்தனை மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கு மழை  நீர் தேங்கி  நிற்காமல் வழிந்தோட மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்புகள் குறித்த தொழில்நுட்ப ஆலோசனையை  வழங்கும் பணியை இந்திய சர்வே துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

அவ்வகையில் அவினாசி மேட்டுப்பாளையம் சாலையில் இந்த பணி நடைபெற்றது.  இந்திய சர்வே துறையின் காங்கயம் பிரிவு அலுவலர்கள் இப்பணியை மேற்கொண்டனர். இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், மாநிலத்தில் 200 இடங்களில் இத்தகைய பணியை மேற்கொள்ளப்படுகிறது. 

கோவை மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து 500மீட்டர் உயரத்திலும்,ஈரோடு மாவட்டம் 180 மீட்டர் உயரத்திலும் அவிநாசி 370மீட்டர் உயரத்திலும் உள்ளது. ஆய்வறிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையினர் பணிமேற்கொள்வர் என்றனர்.