திருப்பூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர்கள், சின்னம், ஆகியவை பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை மாநகராட்சி ஆணையர்கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களுக்கு 3 கட்டங்களாக கணினி மூலம் சுழற்சி முறையில் வழங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பதிவேற்றும் பணிகள் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் மண்டலம் 1 மற்றும் 4 பகுதிகளுக்கு நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், மண்டலம் 2 மற்றும் 3 பகுதிகளுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.