திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொசுமருந்து அடிப்பதையும் வீடுவீடாக சென்று ஆய்வு செய்வதையும் படத்தில் காணலாம் 
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம் - வீடு வீடாக சென்று ஊழியர்கள் ஆய்வு

வீடுகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் மற்றும் பாத்திரங்களில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கொசு உள்ளதா என கண்டறிந்து அதனை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி 4 மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு பணிக்கு என தனியாக ஊழியர்களை நியமனம் செய்து வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் வீடுகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் மற்றும் பாத்திரங்களில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கொசு உள்ளதா என கண்டறிந்து அதனை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் வீதி வீதியாக சென்று கொசு மருந்து தெளிக்கும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.